The Great Prophet Muhammad (SAW) Song in Eid Meeladhun Nabi Celebration 2016
Singer:- Mohammed Fiham, Mohammed Zubani
Lyrics :- Moulavee Sabahi Rabbanee (Philosopher)
பூமான் நபியின் புகழ் மாலை
மெட்டு:- நான் மலரோடு தனியாக
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
இவ் அஹிலத்தின் அருளாக உமை அனுப்பினான்
அவன் சிபத்துக்கள் வெளியாகும் தளமாக்கினான்
உமைக்கொண்டே இவ் உலகில் வழிகாட்டினான்
எமை என்றும் சுவர்கத்தில் நிலையாக்கினான்.
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
தந்தை அப்துல்லாஹ் ஆமீனா மகனாகினீர்
அன்னை ஹலீமாவின் பாலூட்டும் நிலவாகினீர்
உயர் கலிமாவை உலகங்கும் தெளிவாக்கினீர்
பல கோடி முஸ்லீம்கள் உருவாக்கினீர்.
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
குறைஷிக் காபிர்கள் உமை சூழ்ந்து நிற்கின்ற போது
அவர் கண்மீது மண் தூவி மறைந்தீர்கள் அன்று
தவ்ர் குகையில் ஒழிந்தீரே பகைவர்கள் சூழ
புறாக்களும் சிலந்தியும் உமை காவல் காக்க.
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
குறைஷிக் காபிர்களை எதிர்த்து பல போர்கள் வென்று
றப்பின் கலிமாவை உலகெங்கும் நிலை நாட்டி வைத்தீர்
நாமென்றும் உமை மறவோம் எம்உயிர் பிரிந்தும்
உம் மீது ஸலாத்தும் ஸலாமும் உறைப்போம்.
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
காணும் காட்சிகள் யாவும் ஹக்கின் மழ்கர் என்றீர்
அவனேதான் வெளியானான் ஷிருஷ்டிகள் என்றீர்
அல்லாஹ்வை அறிவது முதற்கடமை என்றீர்
இதை அறிந்து தெளிந்தோர் விசுவாசி என்றீர்.
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
உம் புகழ் பாட நான் இக்கவி கொண்டு வந்தேன்
அக்கவி ஒன்றை சொல்லவே உமை நாடி நின்றேன்
இறை அருளால்; இக்கவியை உமக்காயிசைத்தேன்
உளம் உருகி உமக்காக தூக்கம் தொலைத்தேன்.
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
இறை அருளே நபீயே இவ் உலகின் கருவே
எமை காத்து அருள்வீரே மஹ்ஷர் அந் நாளில்
இருகரம் ஏந்தி நிற்பேன் நிழல் ஒன்று பெறவே
ஸபாஅத்து செய்து சுவர்கத்தில் சேர்ப்பீர்
இறை நூரில் வெளியான நபி நாதரே
உம் ஒளியில் உருவானோம் உயிர் நீதரே.
இயற்றியவர் :- மௌலவீ அஹ்மத் ஸபாஹி