நபி (ஸல்) அவர்கள்
1) நபி (ஸல்) அவர்கள் கிபி. 571 யானை ஆண்டில் பிறந்தார்கள் .
அவ் ஆண்டே நபிகளாரின் தந்தை அப்துல்லாஹ் மரணம் அடைந்தார்கள்.
2) நபி (ஸல்) அவர்களுக்கு 6 வயதாக இருக்கும் போது அவர்களின் தாயார் ஆமினா அவர்கள் மரணம் அடைந்தார்கள்.
3) (கிபி) 576ல் அப்துல் முத்தலிப் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாவலராக ஆனார்கள்.
4) (கிபி) 578ல் நபிகளாருக்கு 8 வயதாக இருக்கும் போது அப்துல் முத்தலிப் அவர்கள் மரணமடைந்தார்கள். அபூதாலிப் அவர்கள் நபிகளாருக்கு பாதுகாவலராக ஆனார்கள்.
5) (கிபி) 582ல் நபிகளாருக்கு 12 வயதாக இருக்கும் போது சிரியாவுக்கு அபூதாலிபுடன் வணிகப் பயணம்செய்தார்கள்.
6) (கிபி) 589ல் நபிகளாருக்கு 20 வயதாக இருக்கும் போது ஹர்புல் பிஜார் போரில்இறுதியாக கலந்து கொண்டார்கள்.
7) (கிபி) 591ல் நபிகளாருக்கு 22 வயதாக இருக்கும் போது ஹில்புல் புழூல் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்கள்.
8) (கிபி) 592ல் நபிகளாருக்கு 23 வயதாக இருக்கும் போது அல்அமீன் பட்டம் பெற்றார்கள்.
9) (கிபி) 594ல் நபிகளாருக்கு 25 வயதாக இருக்கும் போது கதீஜா நாயகியின் வியாபாரத் தூதுவராக சிரியா பிரயாணம் செய்தார்கள். இவ் ஆண்டிலேயே அவர்களை மணம் முடித்துக் கொண்டார்கள்.
10) (கிபி) 604ல் நபிகளாருக்கு 35 வயதாக இருக்கும் போது கஃபதுல்லாஹ் புனர் நிர்மாணத்தின்போது ஹஜருல் அஸ்வத் சம்மந்தமாக மத்தியஸ்தஞ் செய்தார்கள்.
11) (கிபி) 605ல் நபிகளாருக்கு 36 வயதாக இருக்கும் போது ஹிரா குகையில் அடிக்கடி தங்கிவர ஆரம்பித்தார்கள்.
12) (கிபி) 610ல் நபிகளாருக்கு 40 வயதாக இருக்கும் போது நுபுவ்வத் கிடைத்தது. இவ்ஆண்டிலேயே கதீஜா நாயகி , ஸைத் (றழி) , அலி (றழி) , அபூபக்கர் (றழி) ஆகியோர் முஸ்லிமானார்கள்.
13) (கிபி) 612ல் நபிகளாருக்கு 43 வயதாக இருக்கும் போது பகிரங்க இஸ்லாமிய பிரச்சாரத் ஆரம்பித்தார்கள்.
14) (கிபி) 614ல் நபிகளாருக்கு 45 வயதாக இருக்கும் போது முஸ்லிம்கள் அபீஸீனியாவுக்கு குடிபெயர்ந்து செண்றார்கள்.
15) (கிபி) 615ல் நபிகளாருக்கு 46 வயதாக இருக்கும் போது ஹம்ஸா (றழி) , உமர் (றழி) ஆகியோர் இஸ்லாமானார்கள் ,தொழுகை பகிரங்கமாக தொழப்பட்டது.
16) (கிபி) 616ல் நபிகளாருக்கு 47 வயதாக இருக்கும் போது 2ம் கோஷ்டி அபீசீனியாவுக்கு பயணம் மேற்கொண்டார்கள்.
17) (கிபி) 617ல் நபிகளாருக்கு 48 வயதாக இருக்கும் போது நபி அவர்களையும் , பனூஹாசிம்களையும் பகிஷ்காரம் செய்தார்கள்.
18) (கிபி) 619ல் நபிகளாருக்கு 50 வயதாக இருக்கும் போது தடைகள் நீங்கியது ஹதீஜா (நாயஹி) , அபூதாலிப் அவர்கள் மரணமடைந்தார்கள்.
19) (கிபி) 620ல் நபிகளாருக்கு 51 வயதாக இருக்கும் போது தாயிப் பயணமானார்கள், அகபா முதல் உருதிமொழியும் பூண்டார்கள்.
20) (கிபி) 621ல் நபிகளாருக்கு 52 வயதாக இருக்கும் போது மிஹ்ராஜ் , ஐங்கால தொழுகை விதியாக்கப்பட்டது. அகபா 2ம் உறுதிமொழியும் செய்யப்பட்டது .
21) ஹிஜ்ரி 01, (கிபி) 622ல் நபிகளாருக்கு 53 வயதாக இருக்கும் போது கெலைச்சதி செய்யப்பட்டது. மற்றும் அவர்கள் ஹிஜ்ரத் செண்றார்கள். மேலும் அல் மஸ்ஜிதுன் நபவியை நிருவினார்கள் , முதல் ஜும்மவையும் தொழுதார்கள்.
22) ஹிஜ்ரி 02, (கிபி) 623ல் நபிகளாருக்கு 54 வயதாக இருக்கும் போது நேன்பு விதியாக்கப்பட்டது, மதீனாவில் பெருமானார் (ஸல்) அவர்களின் தலைமையில் இஸ்லாமிய அரசு நிருவப்பட்டது. , யூதருடன் உடன்படிக்கையும் மற்றும் இவ்ஆண்டிலேயே பத்ர்போரும் இடம்பெற்றது.
23) ஹிஜ்ரி 03, (கிபி) 624ல் நபிகளாருக்கு 55 வயதாக இருக்கும் போது உஹ்துப்போர் இடம்பெற்றது.
24) ஹிஜ்ரி 05, (கிபி) 626ல் நபிகளாருக்கு 57 வயதாக இருக்கும் போது அகழிப்போர் இடம்பெற்றது.
25) ஹிஜ்ரி 06, (கிபி) 627ல் நபிகளாருக்கு 58 வயதாக இருக்கும் போது ஹூதைபிய்யா உடன்படிக்கை இடம்பெற்றது.
26) ஹிஜ்ரி 07, (கிபி) 628ல் நபிகளாருக்கு 59 வயதாக இருக்கும் போது கைபர் போர் இடம்பெற்றது.
27) ஹிஜ்ரி 08, (கிபி) 630ல் நபிகளாருக்கு 61 வயதாக இருக்கும் போது மக்காவெற்றி கிடைத்தது.
28) ஹிஜ்ரி 10, (கிபி) 632ல் நபிகளாருக்கு 63 வயதாக இருக்கும் போது இறுதி ஹஜ்ஜூம் , அறபாத் பேருரையும் இடம்பெற்றது.
29) ஹிஜ்ரி 11, (கிபி) 632ல் நபிகளாருக்கு 63 வயதாக இருக்கும் போது அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள்.
No comments:
Post a Comment