Tuesday, 21 January 2014

ஞானப் பாடல்

ஞானப் பாடல்



அகந்தனிலிலங்கிய ஆதியைக் கண்டிட
ஆஷிகே நீயும் ஆசைவைப்பீர்.
ஜோதி இலங்கிய தூயோனைக் கண்டிட
தொகுத்து நீ என்பதை அழித்திடுவீர் .

கல்பதன் காட்சியை கண்டு தரிசிக்க
ஜத்பணும் இஷ்கை ஏற்றிடுவீர்.
ஜாமிஉல் அஸ்மாவை ஞாபகமுடன் கல்பில்
காமிலிடம் கேட்டுத் தெறிந்திடுவீர்.

ஆலத்தில் நிறைந்திடும் அஹதெனும் பொருளதை
அனுதினம் அகந்தனில் நினைத்திடுவீர்.
கோலத்தில் அது நின்று குறிப்பாய் இலங்கிடும்
(ஹு) வென்பதை யன்றி வேறில்லையே ! .

நெற்றி வெளிநடு மத்திபத்தில் நின்று
நேரேயிலங்கிடும் முத்தது போல்
கத்தோனருளதைப் பெற்றவரே என்று
காமிலொலிமார் சொன்னதுவே !

தன்னை மறந்து தவத்திலிருக்கயில்.
மின்னலைப் போலெங்கும் விளங்கிடுமே
சொல்லரிதாகிய சுகவாசியானதில்
சொக்கி இருந்திடுவாய் சுதனே !

அஹது உஹது வாஹிதிய்யாவெனும்
அரும் பொருள் அதனை அறிந்திடுவீர்
அஸ்மா ஸிபாத்தினில் அடங்கிடும் தாத்தது
அறிந்து தெளிந்திடுவாய் மகனே !.

கானலை நேரொத்த மாய துன்யாவினில்
காலத்தை வீணிலே தள்ளிடாதீர்
மாயுமுன் மாய்ந்து மஹ்பூபைச் சேர்ந்து நீ
மாறா அமிர்தத்தை அருந்திடுவீர்.
                                                  
                                                   Type Setting By :-
 Ahmed Nooree

No comments:

Post a Comment