Sunday, 16 September 2012

தஜ்வீத் சட்டம்

بسم الله الرحمن الرحيم
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيْلَا
குர்ஆனை சரியாகவும் திருத்தமாகவும் ஓதுங்கள்.
சுகூன் உள்ள நூனும் தன்வீனும்
சுகூன் உள்ள நூன் - نْ
தன்வீன் ٌ- ٍ - ً

இள்ஹாருடைய சட்டம்اِظْهَارٌ -       
சுகூன் உள்ள நூனுக்குப்பின் نْ ( அல்லது தன்வீனுக்குப் பின் ٌ-ًٍ இள்ஹாருடைய எழுத்துக்களில் ஒன்று வருமானால் சுகூன் உள்ள நூனை அல்லது தன்வீனை வெளிப்படுத்தி ஓதுதல் வேண்டும்.
இள்ஹாருடைய உறுபுகள் – 06
ء- ه –ع- غ- ح – خ
نْ
ء- مَنْ آمَنَ
ه- اِنْ هُوَ
ع-  مِنْ عَلِيْمٍ
غ- مِنْ غِلٍّ
ح-  مِنْ حَسَنَةٍ
خ -    مِنْ خَيْرٍ
தன்வீன்ً  ٍ  ٌ
ء- رَسُوْلٌ اَمِيْنٌ
ه- جُرُفٍ هَارٍ
ع – سَمِيْعٌ عَلِيْمٍ
غ- عَزِيْزٌ غَفُوْرٌ
 ح- عَلِيْمٌ حَكِيْمٌ
خ - قَوْمٌ خَصِمُوْنَ

  இஃபாவின் சட்டம்   اِخْفاء  
இஃபா வென்றால் சுகூனுள்ள நூனுக்குப் பின் அல்லது தன்வீனுக்குப்பின் இஃபாவுடைய எழுத்துக்களில் ஒன்று வந்தால் அதை இஃபா செய்து (மூக்கில் மறைத்து ஓத வேண்டும்)

இஃபாவுடைய எமுத்துக்கள் – 15 அவைகளாவென
ت - ث - ج - د - ذ - ز - س - ش - ص - ض - ط - ظ - ف - ق – ك

نْ-ت/ لَنْ تَفْعَلُوْ               نْ-ز/ فَمَنْ زُحْزِح          نْ-ط/ مِنْ طِيْنًٍ-ٌ/ قَوْمٌ تَجْحَلُوْنَ           ٍ-ٌ/ صَعِيْدًا زَلَقًا        ً-ٌ-/ صَعِيْدًا طَيِّبًانْ-ث/ مِنْ ثَمَرَةٍ                نْ- س/ مِنْ سُلْطَانٍ         نْ-ظ/ مِنْ ظَلَمٍ
ً-ٌ/ مَاءًا ثَجَّجَا              ً-ٌ/ قَوْلًا سَدِيْدًا           ً-ٌ/ ظِلَّا ظلِيْلًانْ-ج/ مَنْ جَاء                 نْ- ش/ مَنْ شَكَرَ          نْ-ف/ مِنْ فوْرِهِمًْ-ٌ/ صعِيْدًا جُرُزَا            ً-ٌ / شَيْءٍ شَهِيْدَا       ً-ٌ/ قَوْمٌ فَاسِقُوْنَنْ-رَ/ مِنْ دُبُرٍ                  نْ-ص/ مِنْ صِيَامٍ            نْ-ق/ مِنْ قَبْلًُ-ٌ / كَأْسًا دِهَاقَا            ً-ٌ/ قَوْمٌ صَالِحُوْنَ        ً-ٌ/ رِزْقًا قَالُوْانْ-ذ/ مِنْ دَالِكَ                نْ-ض/ لِمَنْ ضَلَّ            نْ-ك/ اِنْ كَانَ
ً-ٌ/ ظِلٍّ ذِيْ                 ً-ٌ/ عَذَابًا ضِعْفًا          ً-ٌ/ بِدَمٍ كَذِبٍ



குறிப்பு-
اللهஎன்ற வார்த்தைக்கு முன் ِவந்தால் மெல்லினகாக ஓதுதல் வேண்டும். اللهஎன்ற வார்த்தைக்கு முன் ً-ٌ வந்தால் வல்லினமாக ஓதுதல் வேண்டும்.
உதாரணம்- வல்லினம் رَسُوْلُ اللهِ                மெல்லினம்-  بِاللهِ

இத்ஙாமின் சட்டம்   اِدْغَامٌ
இத்ஙாம் என்றால் ஓர் எழுத்தை இன்னேர் எழுத்துடன் இணைப்பதை இத்ஙாம் என்று சொல்லப்படும். இத்ஙாமுடைய எழுத்துக்கள் يَرْمَلُوْنَ என்பதில் உள்ள ي ر م ل ونஎன்னும் 06 எழுத்துக்களாகும். சுகூனுள்ள நூனுக்குப் பின் அல்லது தன்வீனுக்குப்பின் இத்ஙாமுடைய எழுத்துக்களில் ஒன்று வந்தால் சேர்த்து ஓதுதல் வேண்டும். ي وم نஆகிய எழுத்துக்களை ராகத்துடன் சேர்த்து ஓதுதல் வேண்டும். ل ر ஆகிய இரு எழுத்துக்களையும் ராகம் இன்றி சேர்த்து ஓதுதல் வேண்டும்.

உதாரணம்
ராகத்துடன் சேர்த்து ஓதுவதற்கு- 04 எழுத்துக்களுக்கும் உதாரணம்.
نْ- ي / مَنْ يَّقُوْلُ
نْ- و/ مِنْ وَّالْ .
نْ-م/ مِنْ مَّالٍ
نْ-ن/ مِنْ نَّفْعِهِ
ً – ٍ/ خَيْرًا يَّرَهُ.
ً-ٍ هُزُوًا وَّلَعِبًا
ً ٌ/ قَوْمٌ مُّسْرِفُوْنَ
ً  ٍ / سُلْطَا نًا نَّصِيْرًا
ராகம் இன்றி சேர்த்த ஓதுவதற்கு – 02 எழுத்துக்களுக்கும் உதாரணம்.
نْ- ر/مِنْ رَّبِّكَ .
ً- ر/ غَفُوْرٌالرَّحِيْمٍ .
نْ-ل/ مِنْ لَّدُنْكَ .
ً-ل/ هُدًى الِّلْمُتَّقِيْنَ
(بُنْيَانٌ- قِنْوَانٌ - صِنْوَانٌ – دُنْيَا)

ஆகிய வார்த்தைகளில் சுகூன் உள்ள நூனை வெளியாக்கி ஓதுதல் வேண்டும்.

இக்லாபின் சட்டம்         اِقْلَابٌ
இக்லாப் என்றால் புரட்டுதல் இக்லாபுடைய எழுத்து ب என்ற எழுத்து ஒன்றுதான். சுகூனுள்ள நூனுக்குப்பின் அல்லது தன்வீனுக்குப்பின்  இக்லாபுடைய எழுத்து ب  வந்தால் சுகூன் உள்ள நூனை அல்லது தன்வீனை  மீமாக மாற்றி ( م )  ராகத்துடன் ஓதுதல் வேண்டும்.
خَبِيْرًا بَصِيْرَا ,   مِنْ بَيْنِ   (ب) உதாரணம்-
குறிப்பு
இவ்வாறான இடங்களில் பெரும்பாழும் குர்ஆனில் சிரிய மீம் ஒன்று எழுதப்பட்டிருக்கும் இதை இக்லாபுடைய அடையாளம் என்று கூரப்படும்.


கல்கலா எழுத்துக்களின் சட்ட     خَلْقَلَةٌ
கல்கலாவுடைய எழுத்துக்கள் 5 அவைகளாவனق– ط - ب-ج د இவற்றின் தொகுப்பு قُطْبُ جَدُّ என்பதாகும். சுகூனுடைய நிலைமையில் அல்லது நிப்பாட்டும்போது இந்த 05 எழுத்துக்களில் ஒன்று வருமானால் கலக்கி ஓதுதல் வேண்டும் .அதாவது அசைத்து ஓதுதல் வேண்டும். சுகூனுடைய நிலையில் குறைவாக கலக்கியும் நிப்பாட்டும்போது அதிகமாக கலக்கியும் ஓதுதல் வேண்டும். முந்தியதை கல்கலா சுஃறா என்றும் பிந்தியதை கல்கலா குப்றா என்றும் சொல்லப்படும்.
உதாரணம்-
சுகினின் நிலை مِقْدَارْ (ق) கல்கலா சுஃறா
நிப்பாட்டும் நிலை  مِيْثَاقْகல்கலா குப்றா
சுகூனின் நிலை  مَطْلُوْبْ(ط)- சுஃறா
நிப்பாட்டும் நிலை مُحِيْطْ குப்றா
اَبْتَرْ(ب) சுஃறா
நிப்பாட்டும் நிலை عِقَابْ குப்றா
اَجْرْ(ج)சுஃறா
நிப்பாட்டும் நிலை بَهِيْجْ. குப்றா 
(اَدْنَى) (د). சுஃறா
நிப்பாட்டும் நிலை أحَدْ. குப்றா                                       

                      தொகுப்பு 
                                                     மௌலவி – AS. ஸபாஹி (றப்பானீ)

No comments:

Post a Comment